Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • எங்களை பற்றி
  • நிகழ்வுகள்
    • எதிர்வரும் நிகழ்வுகள்
  • ஊடகப் பகுதி
    • இதழ்கள்
    • அறிக்கைகள்
  • மாற்றுத் திறனாளிகள்
  • தொகுப்பு
    • நிழற்படங்கள்
    • காணொளிகள்
  • தொண்டர்கள்
  • தொடர்புகளுக்கு
  • நன்கொடை
  • EN

எங்களை பற்றி

முகப்பு / எங்களை பற்றி

தமிழ் பரா விளையாட்டு இணையத்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கைத்தீவின் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும்
தமிழ் மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை ஒரு
பேசுபொருளாக முன் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்
மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா நடைபெறுகின்றது.

2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் விளையாட்டு விழாவிற்கு வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் இயங்குகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும்,
மாற்றுத்திறனாளிகளோடு பாடுபடும் சமூகசேவைத் திணைக்களங்கள் அடங்கலான
அரச நிறுவனங்களும் இந்த விளையாட்டுப் போட்டியில் இணைந்து செயற்படுகின்றார்கள்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் குறித்தான மேலதிக தகவல்கள் இந்த இணையத்தில் காணக்கிடக்கின்றது.

நீங்களும் இணைந்து கொள்ளலாம்

இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா வடக்கில் யாழ்ப்பாணத்திலும்,
கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்றது. இந்த விளையாட்டுப்
போட்டிக்கு நீங்கள் உங்களால் ஆன பங்களிப்புக்களைச் செய்ய முடியும். பங்களிப்பு
பின்வரும் வடிவங்களில் அமையலாம்.

1. இணைந்து செயற்படுதல்

இந்த விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் தாங்கள் இணைந்து செயற்படலாம்.

2. நன்கொடை அளித்தல்

இந்த விளையாட்டுப் போட்டி பெரும் பொருட் செலவில் நடாத்தப்படுகின்ற போட்டியாகும். அதற்கான நிதிகள் நன்கொடைகளாக பெறப்படும். அதற்கு இந்த
விழாவிற்கு நன்கொடையாக அளிக்கலாம்.

3. விளம்பரம்

இந்த விளையாட்டுப் போட்டியில் வர்த்தகர்கள் தங்கள் விளம்பரங்களை செய்ய
முடியும்.

மேலதிக தகவல்களை எமது மின்னஞ்சல் ஊடாக பெற்றுக் கொள்ளலாம். 

தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay