நாளை சுய மதிப்பீட்டு மாநாடு - 2019 யாழ்ப்பாணத்தில் ......
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : மாநாடு
சுய மதிப்பீட்டுமாநாடு– 2019 : பாதிக்கப்பட்டோர் 80 அமைப்புக்கள்,பல்கலைக்கழகங்கள்,மக்கள் பிரதிநிதிகள், அரசநிர்வாகத்தினர் பங்கேற்பு பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் சுய மதிப்பீட்டு மாநாடானது நாளை (14.06.2019) யாழ்ப்பாணத்தில் Tilko விடுதியில் உள்ள சோழோ மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருக்கின்றது
விபரம் :
சுய மதிப்பீட்டுமாநாடு– 2019 : பாதிக்கப்பட்டோர் 80 அமைப்புக்கள்,பல்கலைக்கழகங்கள்,மக்கள் பிரதிநிதிகள்,
அரசநிர்வாகத்தினர் பங்கேற்பு பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் சுய மதிப்பீட்டு மாநாடானது நாளை (14.06.2019) யாழ்ப்பாணத்தில் Tilko விடுதியில் உள்ள சோழோ மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகி
இருக்கின்றது.
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழுகின்ற பாதிக்கப்பட்டோர் அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்தவையையும்,சாதித்தவையையும் ஆராயும் நோக்கோடு
பாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து இந்த மாநாட்டை நாடாத்துகின்றார்கள்.
இந்த மாநாட்டினை யாழ்ப்பாணம் றொட்டறிக் கழகமும் - DATA அமைப்பும் இணைந்து
ஏற்பாடு செய்கின்றன. வடக்கு கிழக்கைச் சேர்ந்த
மாற்றுத்திறனாளிகள்
பெற்றோரை இழந்த பிள்ளைகள்
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
பிள்ளைகளை இழந்த மூத்தோர்கள்
ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் இந்த மாநாட்டில்
கருத்துக்களை பகிர இருக்கிறார்கள். அந்தவகையில் வடக்கிலிருந்து 42
அமைப்புக்களும்,கிழக்கிலிருந்து 38 அமைப்புக்களும் இணைகின்றார்கள்.
இவர்களோடு யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும்,கிழக்குப்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்தமாநாட்டில் கலந்து
சிறப்பிக்கின்றனர்.
இந்த மாநாட்டிற்கான நிகழ்வுகள் காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம்
செய்து வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு முதலாவதாக
பாதிக்கப்பட்டோர் அமர்வு நடைபெறும். இதில் பாதிக்கப்பட்டோரில் பல
தடைகளை தாண்டி சாதித்தவர்களில் ஒரு சிலர் இந்த மாநாட்டில்
கருத்துக்களை பகிர இருக்கிறார்கள். அவர்களில் மாற்றுத்திறனாளியாக இருந்து சாதித்தவர்கள்,பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் இருந்து சாதித்தவர்கள்,பெற்றோரை இழந்து சாதித்தவர்கள் அடங்குகின்றார்கள்.
காலை 11 மணிக்கு பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரின் அமர்வு
இடம்பெறுகின்றது. பாதிக்கப்பட்டோரோடு பல்வேறு வழிகளில்
இணைந்து பணியாற்றும் அரசசார்பு அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள் இந்த
அமர்வில் பங்கேற்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து அரச அதிபர்கள் அவர்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் அமர்வு இடம்பெறும். சிறப்பு விருந்தினர்களின் உரையோடு காலை அமர்வுகள் நிறைவு பெறுகின்றது.
இந்த மாநாட்டின் மாலைஅமர்வுகள் பாதிக்கப்பட்டோரின் பாதிப்புத்
தன்மையை மையப்படுத்தி குழுநிலைக் கலந்துரையாடல்கள்
நடைபெறுகின்றன. அந்தக் குழு நிலைக் கலந்துரையாடல்களில்
பாதிக்கப்பட்டோர்கள் பின்வரும் வகையில் அணிகளாக இணைந்து
கலந்துரையாட உள்ளார்கள்.
1. கை,கால்களை இழந்தவர்
2. கண் பார்வை குறைந்தவர்
3. சக்கரநாற்காலி பாவனையாளர்
4. மனவளர்ச்சி குன்றியவர்
5. கேட்டற் பேச்சு குறைபாடு உடையவர்
6. பெண் தலைமைத்துக் குடும்பங்கள்
7. பெற்றோரை இழந்தபிள்ளைகள்
8. பிள்ளைகளை இழந்த முதியோர்கள்
9. உழைக்கும் மாற்றுத்திறனாளிகள்
10. பொதுவானவை
மாநாட்டின் இறுதியில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தையும் இணைத்து மாநாட்டின் பிரகடனமாக வெளியிடப்படும். அத்தோடு அந்த பிரகடனத்தில் குறிப்பிட்டிருக்கின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கு
பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டோர் அனைவரும் இணைந்து செயற்பட முன்வருவார்கள் என்றபெரு நம்பிக்கையினை இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் கொண்டுள்ளார்கள்.
இந்த மாநாடானது பாதிக்கப்பட்டோரும் அவர்களோடு பயணிப்போரினது செயற்பாடு குறித்து சுய விமர்சனம், சுய பரிசீலனை செய்து இன்னமும் வினைத்திறனாகச் செயற்படுவதற்கான ஒருபடி நிலையைகாணதேடும் முயற்சியேதவிர குறை கூறி குற்றம் காணும் நடவடிக்கைகளை இந்த மாநாடு மேற்கொள்ளாது,என்பதையும் இந்த
மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர். யதார்த்த நிலைமைகள் உள்ளது உள்ளபடி பதியப்படும், உள்ளதுஉள்ளபடிசொல்லப்படும். அதன் மூலம் பாதிக்கப்பட்டோரின்
வாழ்வில் வளம் பெற்று இனிவரும் காலங்களில் அவர்கள் சுமை நிறைந்த
வாழ்வாக கழிக்காது இருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோரோடு
பயணிக்கும் அனைவரினதும் பேரவாவாகும்.
இந்த மாநாட்டில் பங்குபெறுகின்ற அமைப்புக்கள், இந்த மாநாட்டிற்கு
வருகைதர இருக்கின்ற சிறப்பு விருந்தினர்கள் இந்த மாநாட்டில் கலந்து
அந்த செய்தியினை உலகளாவியரீதியில் எடுத்துச் செல்ல இருக்கின்ற
ஊடகவியலாளர்கள் , பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத்தின்
பிரதிநிதிகள் அனைவருக்கும் இந்தமாநாட்டுக்குழு சார்பாக நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.