பசியாற்றும் பயணம் - போர்க்காலத்தில் ஒரு பொழுதில் ஊரே தனது வாழ்க்கைத் துணைவரை பறி கொடுத்த கிராமம்.
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்
பசியாற்றும் பயணம் வீரமுனை விதவையர் சங்கம்....... போர்க்காலத்தில் ஒரு பொழுதில் ஊரே தனது வாழ்க்கைத் துணைவரை பறி கொடுத்த கிராமம். கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வீரமுனை என்ற கிராமம். போர்க்கால வரலாற்றை அறிந்தோர் இந்த கிராமத்தின் சோகத்தை உள்ள படி அறிவார்கள். ஊரில் நாங்கள் எல்லோரும் ஒரே நாளில் விதவைகளானோம் எனக் கூறி மெளனமாக இருந்தார் அந்த சங்கத்தின் தலைவி. (பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் மாநாடு - யாழ்ப்பாணம் ) ஏன் எனக் கேட்டபோது வீரமுனையின் சோக வரலாற்றை சென்னார், அவர்களின் கண்ணீருக்கு பத்திரிகையாளர் பிரியமாதா வரிவடிவம் கொடுத்து தொடராக எழுதி வருகின்றார். (http://kuralkal.com/2020/03/03/1562/ ).
விபரம் :
பசியாற்றும் பயணம்
வீரமுனை விதவையர் சங்கம்.......
போர்க்காலத்தில் ஒரு பொழுதில் ஊரே தனது வாழ்க்கைத் துணைவரை பறி கொடுத்த கிராமம்.
கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வீரமுனை என்ற கிராமம். போர்க்கால வரலாற்றை அறிந்தோர் இந்த கிராமத்தின் சோகத்தை உள்ள படி அறிவார்கள்.
ஊரில் நாங்கள் எல்லோரும் ஒரே நாளில் விதவைகளானோம் எனக் கூறி மெளனமாக இருந்தார் அந்த சங்கத்தின் தலைவி. (பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் மாநாடு - யாழ்ப்பாணம் )
ஏன் எனக் கேட்டபோது வீரமுனையின் சோக வரலாற்றை சென்னார், அவர்களின் கண்ணீருக்கு பத்திரிகையாளர் பிரியமாதா வரிவடிவம் கொடுத்து தொடராக எழுதி வருகின்றார். (http://kuralkal.com/2020/03/03/1562/ ).
வடக்கு கிழக்கின் பேசப்படாத சோகங்கள் இன்னும் பல. அவர்கள் சிறு சிறு அமைப்புக்களாக இயங்கி வருகின்றார்கள். இவர்களோடு பயணப்படுகின்றோம்.
50 பொதிகள் கேட்டார்கள் - 20 மட்டுமே நாங்கள் கொடுத்துள்ளோம்..... வீரமுனை விதவையர் சங்கத்துக்கு இன்னமும் 30 கேட்கிறார்காள். முடியுமானவரை உதவுங்கள்...
"புருசனையும் பிள்ளையையும் பறிகுடுத்துட்டு வாழ்றன் மவன். வயல்ல வேலை செய்யிறனான். இப்ப வேலை இல்லை மவன். உங்க பொதி கிடைச்சுது, முடிஞ்சா மத்தவங்களுக்கு குடுங்க மவன்".... வீரமுனையிலிருந்து ஒரு அம்மா அனுப்பிய ஒலிப்பதிவு . http://www.virginmoneygiving.com/fund/DATA-Corona-relief
பசியாற்ற சேர்ந்த நிதி : £8,315.34 + Rs.30,000.00 : சேர்ந்த பொதிகள் :1,688
இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 691
#அம்பாறை - 50
#முல்லைத்தீவு - 100
#மட்டக்களப்பு - 220
#யாழ்ப்பாணம் - 170
#கிளிநொச்சி - 61
#வவுனியா - 70
#மன்னார் - 20
பகிர்ந்து பசியாறுவோர் :
#மாற்றுத்திறனாளிகள்
#பெண்தலைமைக்_குடும்பங்கள்
#சிறுவர்_இல்லங்கள்
#முதியோர்_இல்லங்கள்
(எம்மோடு பயணிக்கும் 80 அமைப்புக்களுக்கு 20 பொதிகள் அளவில் பகிர்ந்தளிக்கின்றோம் )
இணைந்து பசியாற்றுவோர் :
Think 2Wice Association - 200 பொதிகள்
சுன்னாகம்_மக்கள்_ஒன்றியம் - 100 பொதிகள்
மனிதநேயம்_அறக்கட்டளை - 300 பொதிகள்
IFOH_Trust - 50 பொதிகள்