Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

சிறப்புக்குழந்தைகள் - கொரோனாக்காலம் - தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத சிறப்புக்குழந்தைகள்.

முகப்பு / நிவாரணம்

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்

சிறப்புக்குழந்தைகள் - கொரோனாக்காலம் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஒரு சிறப்புக்குழந்தையின் தாய் அண்மையில் இந்த முடக்கத்தில் தன் மகனின் நிலையை ஊடகத்துக்கு கூறினார்.

விபரம் :

சிறப்புக்குழந்தைகள் - கொரோனாக்காலம்

தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஒரு சிறப்புக்குழந்தையின் தாய் அண்மையில் இந்த முடக்கத்தில் தன் மகனின் நிலையை ஊடகத்துக்கு கூறினார்.

"அவனுக்கு என்ன வேண்டும் என என்னை விட அவனை பராமரிக்கும் சமூக தொண்டர்களுக்கு (Social Workers) தான் தெரியும் ...இந்த சமூக முடக்கத்தில் அவன் தவிக்கிறான்" எனக் கூறி மெளனமாக இருந்தார் கண்ணீருடன்.

அவர்களை பராமரிக்கும் இல்லங்கள் சமூகத்தின் அத்தியாவசியமான அங்கம்,

சிறப்புகுழந்தைகளுக்காக இயங்கும் பல இல்லங்களும் அமைப்புக்களும் தாயகத்தில் இருக்கின்றன.

கொரோனா முடக்கக்காலத்தில் அவர்கள் ஆற்றும் பணி உலகளாவிய ரீதியில் வியந்து பாராட்டப்படுகின்றது.

இந்த இல்லங்களுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் பகிருங்கள்.

Tamil Para Sports மைதானத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. அவர்களும் ஆர்வமாக கலந்து கொள்கின்றனர். அவர்களின் ஆசிரியர்கள் தமது பிள்ளைகள் வெல்ல வேண்டுமென்பதில் காட்டும் ஆர்வம் அளப்பரியதாக இருக்கும். அந்த நிகழ்வுகளை இந்நேரத்தில் நினைவுகூருகிறோம்.

பின்வரும் இல்லங்களுக்கு சராசரியாக 20 பொதிகளை நாம் பகிர்கின்றோம். இன்னும் அவர்களுக்கு தேவை உள்ளது.... நீங்களும் உதவலாம்.

யாழ்ப்பாணம்
1.ஆர்க்
2.சிவபூமி

கிளிநொச்சி
3.விசேட தேவைக்குட்டப்பட்ட சிறுவர் வலுவூட்டல் இணையம்

வவுனியா
4.சீட்
5.வரோட்
6.ஓர்கான்

மன்னார்
7.மாடப்
8.வாழ்வுதயம்

மட்டக்களப்பு
9.ஓசானம்
10.சென்ஜோசப் பாடசாலை
11.மென்கப்
12.சாகிரா விசேட தேவையுடையோர் பாடசாலை
13.சாதுரியா வித்தியாலயம்
14.ஸிமிர்னா விசேட தேவையுடையோர் பாடசாலை
15.தீரனியம்.

அம்பாறை
16.இராமகிருஸ்ண மிஷன் விசேட தேவைக்குட்ப்பட்ட சிறுவர் இல்லம்.

இணைந்து பசியாற்றுவோர்.....
Think 2wice Association - Reg.Charity No:1143421 - 200 பொதிகள்
Association of Chunnakam People in UK - 100 பொதிகள்
Manitha Neyam Trust - 520 பொதிகள்
Ifoh_trust - 50 பொதிகள்
Southall_Tamil_School - 100 பொதிகள்

பாதிக்கப்பட்டோரின் பசியாற்றும் பயணத்தில் நீங்களும் இணைய......

http://www.virginmoneygiving.com/fund/DATA-Corona-relief

பயணம் தொடரும்.........

திகதி

2020/05/14

நேரம்

10:00 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay