Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

அடையாளத்தை தேடி நீண்ட பயணத்தில் மாற்றத்தை நோக்கிய மாற்றுத்திறனாளிகள்.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்டவர் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

யார் இவர்கள்?.. வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த ஓர் கூட்டம், சமூகத்தை கண்டு அச்சி ஒடுங்கிய கூட்டம், தமது திறமையை இழப்புக்களினை காரணமாக நினைத்து தமது பாதை முற்றுப் பெற்றதாக என்னி பின்நோக்கிப் பயணித்த ஒரு கூட்டம்,

இன்று வாய்ப்புகளை தமக்கு கிடைத்த மேடையாக கொண்டு தமக்கான அடையாளத்தை தேடி நீண்ட பயணத்தை ஆரம்பித்து ஓடிக்கொண்டிருக்கும் மாற்றத்தை நோக்கிய மாற்றுத்திறனாளிகள்

DATA அமைப்பின் ஒருங்கிணைப்பில் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி (2016, 2017) இரண்டு வருடங்களக மிகச் சிறப்பாக வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றன.  இந்த போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான மேடையாக அமைந்தது.

அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் ஒன்றினைந்தனர்.  தாமே  போட்டிகளை தயார்  படுத்தி, தாமே தலைமை தாங்கி, மிகப் பிரம்மாண்டமாக போட்டிகளை நடாத்தினார்கள்.  தேசிய சர்வதேச ரீதியில் இடம்பெறும் போட்டிகளில் பங்குபற்றக் கூடிய திறமை வாய்ந்தவர்களை உருவாக்கினார்கள். 

இலங்கை தேசிய அணிகளிலும் இடம்பிடித்தனர். சமூகத்தில் தங்களை போன்றோர் இருக்கின்றோம் என்பதை அடையாளமிட்டனர்..
அவர்களது நீண்ட பயணம் வெற்றிகளை நோக்கி செல்லும் என்பதில் ஜயம் இல்லை

திகதி

2017/08/06

நேரம்

09:00 AM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay