மாற்றத்தை நோக்கிய மாற்றுத்திறனாளிச் சிறார்கள்!
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : விளையாட்டு
...
விபரம் :
DATA அமைப்பின் ஒருங்கினணப்பில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளிலே மைதானத்தை அழகாக்கும் ஓர் நிகழ்வாகவும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது மாற்றுத்திறனாளி சிறார்களினுடைய போட்டிகள்.
தம் இழப்பை தாம் மறந்து துள்ளிக் குதித்தனர் சிறார்கள். மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டனர் சிறார்கள். யார் இவர்கள்? இவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்ற கேள்விகள் ஓர் காலத்தில் இருந்து போதும் இன்று அவர்களது மாற்றம், அவர்களது வாழ்க்கையில் ஏற்படப் போகும் மாற்றம் இப் போட்டிகள் மூலம் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது மாற்றத்தை நோக்கிய இந்த பயணத்தின் ஆரம்பம் வெற்றி பெற்றது தமிழ் பரா விளையாட்டுக்கள் மூலம். .
2016ம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் பரா விளையாட்டுக்களில் சிறுவர்களுக்கான அதாவது 14 வயதுக்கு உற்பட்டவர்களுக்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றிருக்கவில்லை 2017 ம் ஆண்டிற்கான தமிழ் பரா விளையாட்டுக்களில் சிறுவர்களுக்கான போட்டிகள் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஓர் நிகழ்வாக பார்க்கப்பட்டது எனலாம். நினைத்ததை விட மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது சிறுவர்களுக்கான போட்டிகள்.
இப் போட்டிகள் தொடர்பாக போட்டிகளில் பங்கு பற்றிய சிறுவர்கள் கூட்டத்தில் சென்று இந்த விளையாட்டுப் போட்டியில் நீங்கள் எல்லோரும் பங்குகொண்டு வெற்றிகள் எல்லாம் பொற்றுக் கொண்டுள்ளீர்கள் இது எப்படி இருக்கு உங்களுக்கு என்று கேட்டபோது அனைவரும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக சத்தம் போட்டனர் இது அவர்களிடம் இருந்து வந்த முதல் பதிலாக இருந்தது மேலும் அவர்கள் குறிப்பிடும் போது இனி எப்போது எங்களுக்கு போட்டி நடாத்துவீர்கள் நாங்கள் நிறைய விளையாடுவோம் நிறைய போட்டிகள் நடாத்துங்கள் என கூறினார்கள்
இவர்களது பதில்கள் அவர்களது மனநிலையை புரிய வைத்தது
போட்டித்தன்மை பொறாமை அற்ற மகிழ்சியை மட்டும் எதிர்பார்க்கும் சிறார்களின் மன நிலை அவர்களின் மாற்றத்தின் படிக்கட்டுகளில் அழைத்துக்கொண்டு செல்லும் என்பது நிச்சயமே!
மேலும் சிறுவர்களுக்கான போட்டிகளே எம்மை ஈர்க்கும் ஒன்றானவை எனலாம். தமிழ் பரா மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான போட்டிகளாக வர்ணம் தீட்டுதல், நீர் நிரப்புதல், ஓட்டம், நீளம் பாய்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
மேலும் இடம்பெற்ற விளையாட்டுக்களில் அனைத்து பார்வையாளர்களையும் எழுந்து நின்று கரகோசம் ஏற்படுத்தும் வண்ணம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தது சிறுவர்களுக்கான போட்டிகள்.
ஓடும் சிறுவர்களுக்கு பின்னால் உற்சாகம் கொடுத்தபடி செல்லும் பயிற்சி ஆசிரியர்கள், அனைத்து புகைப்படக் கருவிகளும் சிறுவர் பக்கம் திரும்பிய தருனங்கள், விருந்தினர்களை ஒருகணம் எழுந்து கரகோசம் ஏற்படுத்த வைத்த ஒரு நிமிடங்கள், ஒலி அமைப்பை விட ஓங்கி ஒலித்த பார்வையாளர்களின் ஆர்பரித்த சத்தங்கள் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தை மேலும் அழகாக்கியது.