தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் அழைப்பிதழ்: ஜூலை 8 எம்மோடு நடக்க, எமக்காக நடக்க, நீங்களும் வருவீர்களா?
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நடை
லண்டனில் : Lee Valley Regional Park Fishers Green car park, Stubbins Hall Lane, Crooked Mile, Waltham Abbey, EN9 2EE யாழ்ப்பாணத்தில்: யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி துரையப்பா மைதானம் வரை. மட்டக்களப்பில் : போதனா வைத்தியசாலைக்கருகாமை, கல்லடி பாலத்துக்கருகாமை, புகையிரத நிலையத்துக்கருகாமை, தாண்டவன் வெளி தேவாலயத்துக்கருகாமையிலிருந்து காந்தி பூங்கா வரை.
விபரம் :
தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் அழைப்பிதழ்: ஜூலை 8 எம்மோடு நடக்க, எமக்காக நடக்க, நீங்களும் வருவீர்களா?
Press Statement 01.07.2018.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா 2018 ஐ முன்னிட்டு தமிழ் மாற்றுத்திறனாளிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு நடை மாற்றுத்திறனாளிகளோடு என்னும் நடைபயணம் ஜூலை 8ம் திகதி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
லண்டனில் :
Lee Valley Regional Park
Fishers Green car park, Stubbins Hall Lane, Crooked Mile, Waltham Abbey, EN9 2EE
யாழ்ப்பாணத்தில்:
யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி துரையப்பா மைதானம் வரை.
மட்டக்களப்பில் :
போதனா வைத்தியசாலைக்கருகாமை, கல்லடி பாலத்துக்கருகாமை, புகையிரத நிலையத்துக்கருகாமை, தாண்டவன் வெளி தேவாலயத்துக்கருகாமையிலிருந்து காந்தி பூங்கா வரை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள் இணைந்து இந்த நடைபயணத்தை மேற்கொள்கின்றன.
மாற்றுத்திறனாளிகள் எம் சமூகத்தில் ஒரு பேசு பொருளாக வரவேண்டும் என்ற நோக்கோடு முன்னெடுக்கப்படும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா
மற்றும் ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளோடு என்னும் இசை நிகழ்வு,
ஒரு நடை- மாற்றுத்திறனாளிகளோடு என்னும் நடைபயணம் ஆகியவற்றில் உங்கள் பங்களிப்பை நல்கவிரும்பும் நல்லுள்ளங்கள் கீழ்காணும்
இணைய இணைப்பின் மூலம் இணைந்து பங்காற்றலாம்.
http://uk.virginmoneygiving.com/fund/Lotuscaringhands
தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, ஐ.பி.சி தமிழ், நம்பிக்கை ஒளி இணைந்து நடத்தும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா இவ்வருடம் ஜூலை மாதம் 28, 29ம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானம், மற்றும் ஆவணி 4ம், 5ம் திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்திலும் நடத்தப்பட ஏற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளமையை தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு பெருமையுடன் அறிவிக்கின்றது. ஆவணீ 2ம் திகதி வவுனியா நகரசபை மைதானத்தில் சத்தப்பந்து கிரிக்கட் போட்டியும் , சக்கரநாட்காழி கூடைப்பந்தாட்டமும் நடைபெறும்.
இவ்விழாவிற்கு LONDON - ABI Diamond பிரதான அனுசரனை வழங்குகின்றார்கள். MIA - London , INNOVAY , Raj Cluster ஆகியோர் இணை அனுசரனை வழங்குகின்றார்கள்.
வடகிழக்கு எங்கிலும் வாழும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள பின்வரும் அமைப்புக்களினூடு இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
வடமாகாணம்
01. வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கம்
02. யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கம்
03. உயிரிழை
04. Orhan
05. Deaf Link
06. Nuffeild School
07. Arod
08. Vadamarachchi Deaf Association
09. VAROD
10. SEED
11. சண்டிலிப்பாய் மாற்றுத்திறனாளிகள் சமாசம்
12. வாழ்வோதயம்
13. வாழ்வகம்
14. சிவபூமி
15. கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம்
16. ஒளிரும் வாழ்வு
17. இனிய வாழ்வு
18. ARK School (Uduvil)
19. என்.பி கோடா
20. இணையும் கரங்கள்
22. பீனிக்ஸ்
கிழக்கு மாகாணம்
1. மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம்
D.P.O ( மட்டக்களப்பு பிரதேசரீதியான மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள்)
01. வாகரை பிரதேசம் (ஆரோக்கியா)
02. ஓட்ட மாவடி பிரதேசம் (கியூமன் ஏபிட்)
03. வாழைச்சேனை பிரதேசம் (வாழ்வின் உதயம்)
04. கிரான் பிரதேசம் (புதிய பாதை)
05. செங்கலடி பிரதேசம் (ஏர்முனை)
06. ஆரையம்பதி பிரதேசம் (சமூக உள்வாங்கள் அமைப்பு )
07. வவுனதீவு பிரதேசம் (வாழ்வகம்)
08. பட்டிப்பளை பிரதேசம்(உதய ஒளி)
09. வெல்லாருவளி பிரதேசம் (கதிரவன்)
10. கழுவாஞ்சிக்குடி பிரதேசம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு
11. காத்தான் குடி பிரதேசம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு
12. மண்முனை வடக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு
13. ஏறாவூர் நகர் பிரதேசம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு
14. ஓட்டமாவடி மத்திய பிரதேசம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு
ஏனைய கிழக்கின் அமைப்புக்கள்
01. உதயம்
02. தரிசனம்
03. ஓசாணம்
04. மென்சப்
05. புகளிடம்
06. சாகிரா
07. சகாரா
08. ROOT
09. YMCA
அதேவேளை மாற்றுத்திறனாளிகள், தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்போடு நேரடியாகவும் தொடர்புகொண்டு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் .
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்வான தருணத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்வதாக கூறும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் இணைத்தலைவி செல்வி. வே. குமுதினி மாற்றுத்திறனாளிப் பாடகர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நோக்கோடு ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளோடு என்னும் இசை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார்.
மாற்றுத்திறனாளிகள் ஓரளவு முன்னேற ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதை நினைவுகூறும் இந்த தருணத்தில் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளை மறந்துவிட முடியாது எனவும் குறிப்பிடுகின்றார் செல்வி. குமுதினி.
அண்மையில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என அவரது தாய் அழுதபடி கூறிய காணொளியைப் பார்த்தோம். இன்னுமொரு மாற்றுத் திறனாளி ஒரு கோவில் ஓரம் யாசகம் கேட்டு கையேந்தும் காணொளியையும் பார்த்தோம். காணொளிகளுக்குள் அகப்படாத கண்ணீரும் கவலைகளும் இன்னமும் ஏராளம். அழுத்தப்புண்களும், மன அழுத்தமும், வறுமையும் வாட்டி வதைத்து அழுந்தி அழுந்தி இறந்தே போகும் பல நூறு மாற்றுத் திறனாளிகள் இன்னமும் எங்களோடு வாழ்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை.
ஒவ்வொரு வருடமும் நாம் விளையாட்டு போட்டிகளை நடாத்தும் போது இந்த கேள்விகளை எமக்குள் கேட்டுக் கொள்கின்றோம்.
நம்மில் எத்தனை மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றார்கள்?
அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் ?
அவர்களுக்கு வாழ்வு இனி எப்படி செல்லப்போகின்றது....
இவை எல்லாம் விடை தெரியாத கேள்விகளா ?
இல்லை விடை வேண்டாம் என்று விடப்பட்ட கேள்விகளா ?.....
இவ்வாறு நொந்து, வெந்து வாழும் ஒரு சமூகக் கூட்டம் அதன் அடுத்த படிநிலை நோக்கி செல்கின்றது.
நாம் ஒரு பேசு பெருளாக வரவேண்டும். மாற்றுத்திறனாளி ஒரு பேசு பொருளாக வரவேண்டும்
அந்த பயணத்தில் எம்மோடு பயணிக்க வருவிர்களா? எம்மோடு ஜூலை 8ல்............